பிக்பாஸ் 2 டீசர்... டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார் கமல் சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான டீசரை நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ளார். கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக தேர்வானார். இந்நிலையில், பிக்பாஸ் 2 அடுத்தமாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் கமல், அடுத்த சீசனை தொகுத்து வழங்க மாட்டார் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால்ஆ அதற்கு மாறாக தனது அரசியல் பணிகளுக்கு இடையே பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை பிக்பாஸ் 2-ன் டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் மாலை 5 மணிக்கு டீசரை வெளியிட்டார்.