ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு- வீடியோ
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டம், வழக்கு கடந்து வந்த பாதையை அவர் எழுதியுள்ளார்.
http://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-cm-palanisamy-releases-intimation-on-closes-sterlite/articlecontent-pf309484-320998.html
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிரித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது.இதுமக்கள் மத்தியில் பெரிய சந்தோசத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி, 13 பேரின் உயிரை இழந்து அவர்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.
தடை
தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் அரசாணை குறித்து தமிழக அரசு தனி அறிக்கை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 22 வருடங்களாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. கடந்த 23.3.2013 அன்று ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததை அடுத்து, தொழிசாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிக்கவும் 29.3.2013ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் மேல்முறையீடு
ஆனால் அதன்பின் ஸ்டெர்லைட் ஆலை பசுமை தீர்ப்பாயத்தில், மேல்முறையீடு செய்தது. இதில் 8.8.2013ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தற்போது அந்த மனு விசாரணையில் உள்ளது.
மாசுக்கட்டுப்பாடு
இந்த நிலையில் ஸ்டெர்லைட் இயங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது. மாசு கட்டுப்பாட்டை சரியாக கடைபிடிக்காததால், பசுமை கட்டுப்பாடு வாரியம் , ஸ்டெர்லைட் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் கடந்த 24.5.2018 அன்று ஆலைக்கான மின்சாரம் இணைப்பு மொத்தமாக துண்டிக்கப்பட்டு, தண்ணீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
அரசாணை வெளியீடு
இந்த நிலையில் தமிழக அரசு விதிகளையும், பசுமை கட்டுப்பாட்டு விதிகளையும் மதிக்காத ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராடினார்கள். மேலும் ஆலையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் ஆலையை மூட வேண்டும் தமிழக அரசு அரசாணை முடிவெடுத்துள்ளது. என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment